மத்திய பிரதேச மாநிலத்தில் ஊரடங்கை மீறி கடையை நடத்திய உரிமையாளரை காவல்துறையினர் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி விற்பனை செய்யப்படும் கடைகளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் கிராமத்தில் விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்த உரிமையாளரை காவல்துறையினர் அடித்தபோது, ஆத்திரமடைந்த நிர்வாகி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் சேர்ந்து அந்த காவல்துறையினரை ஒரு வீட்டிற்குள் வைத்து கம்பியால் சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.