கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் இந்த ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். மேலும் வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.