கர்நாடக மாநிலத்தில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசும் கடுமையாக எச்சரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையிலும் தொற்று எண்ணிக்கை குறையவில்லை. எனவே ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 7ஆம் தேதி வரை மீண்டும் நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.