உத்திரபிரதேசத்தில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஊரடங்கின்போது தடுப்பூசி பணிகள், மருத்துவ பணிகள் போன்ற அத்தியாவசிய சேவை தடையின்றி தொடரும் என கூறியுள்ளார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.