Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் முழுமையாக பின்பற்றப்பட்டது… மக்களுக்கு நன்றி கூறிய முதல்வர்!

பிரதமரின் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் முழுமையாக பின்பற்றப்பட்டது, ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைத்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல், ராணுவம், விமானம், ரயில்வே பணியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அரசு தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்து வருகிறது. கொரோனா தொடர்பாக அரசு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். எதிர்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு தேவையான விளக்கங்களை அரசு அளித்துள்ளது.

என்ன காரணத்திற்காக எதிர்க்கட்சிகள் பேரவையை புறக்கணித்தனர் என தெரியவில்லை? என கூறியுள்ளார். மேலும் ஒரு உயிரை கூட இழக்க தமிழக அரசு தயாராக இல்லை என்பதால் கொரோனா நோயை மிகப்பெரிய சவாலாக எடுத்துக்கொண்டு அர்ப்பணிப்போடு பணியாற்றுவோம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |