Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு…” களையிழந்த புத்தாண்டு”… வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்… சென்னையின் நிலை..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது.

முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்தது. இங்கிலாந்தில் புதிதாக பரவியுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் மக்கள் கூடுவதை தவிர்க்க டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தி இருந்தது. ஜனவரி 1ஆம் தேதி இரவு 11 மணி முதல் ஜனவரி 2-ஆம் தேதி காலை 6 மணி வரையிலும் ஊரடங்கு விதிக்கப்படுவதாக டெல்லி தலைமை செயலாளர் விஜய் தேவ் நேற்று கூறி இருந்தார்.

எனினும் சரக்கு வாகனங்களுக்கு தடை இல்லை என கூறப்பட்டிருந்தது. மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டு சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள எப்பொழுதும் களைகட்டும். குறிப்பாக எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு ஆகிய பகுதிகளில் விடிய விடிய பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

கொரோனா காரணமாக பெங்களூரில் வியாழக்கிழமை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த முக்கிய சாலையான எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோடு, கோரமங்களா, இந்திரா தெருவில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.

சென்னையின் நிலை

அதேபோல் சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, கிழக்குக் கடற்கரையில் பொதுமக்கள் ஒன்றாக கூட தடை விதிக்கப்பட்டு கடற்கரைகள் சீல் வைக்கப்பட்டது. இதற்காக காவல்துறை சார்பில் கடற்கரை பகுதிக்கு அதிக அளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடற்கரைக்கு வரும் பொதுமக்களை கண்காணிக்க குதிரைப்படை, ஆயுதப்படை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். சாலையில் பொதுமக்கள் கொண்டாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டு வழிபாடு நடத்துவதற்கு இரவு 12 முதல் காலை 5 மணி வரை தேவாலயங்கள் மற்றும் கோயிலுக்கு சிறப்பு வழிபாட்டிற்கும் தடைவிதிக்கப்பட்டது. 5 மணிக்கு மேல் காவல் துறையினருடன் அனுமதியுடன் வழிபாடுகள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |