Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏப்.20-ல் இருந்து ஊரடங்கு தளர்த்தப்படாது… கடுமையாக்கப்படும்… கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கடலூரில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். அதேபோல, ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ” மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, கடலூர் மாவட்டம் சிகப்பு பகுதியாக உள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் தற்போது தளர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

25-வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து ஊரடங்கு தளர்வு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு இந்த தளர்வு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவித்திருந்தது. எனவே, கடலூரில் எந்த வித ஊரடங்கு தளர்வும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,372 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடலூரில் மொத்தம் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |