Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹீரோ’ சிவகார்த்திகேயனின் ‘மால்டோ கித்தாப்புல’அர்த்தம் என்ன தெரியுமா.?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் பாடலான ‘மால்டோ கித்தாப்புலே’யின் அர்த்தத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் – ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், ‘இரும்புத்திரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 Image result for Hero movie

இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கான ‘மால்டோ கித்தாப்புல’ சமீபத்தில் வெளியானது.

Image result for Hero movie

‘மால்டோ கித்தாப்புல’ அர்த்தம் என்ன என்று தற்போது படக்குழு தெரிவித்துள்ளனார். அதன்படி, ‘மால்டோ கித்தாப்புல’ என்றால் கெத்தா, ஸ்டைலா, துணிச்சலுடன் சுற்றி திரிபவர்’ என்பது தான். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 20-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப் பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

Categories

Tech |