பிரான்ஸ் நாட்டில் சில நகர்கள் மின்சாரத்தை சேமிக்க தாங்களாகவே முன்வந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.
ஐரோப்பாவில் ஆற்றல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் பல நாகர்கள், மின்சாரத்தை சேமிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றது. Lyon நகரில் மின் விளக்கு திருவிழா மிகவும் பிரபலமானது. இந்நிலையில் அந்நகரத்தை சேர்ந்த அதிகாரிகள் அங்குள்ள கட்டிடங்களில் மின்சாரத்தை சேமிக்க சில வழிமுறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
அதன்படி, அங்குள்ள கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் தேவாலயங்களில் இருக்கும் அலங்கார விளக்குகளை வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே ஒளிர செய்கிறார்கள். அது, மக்கள் நடப்பதற்கும், வழிப்பாதை தெரிவதற்கும் மட்டும் தான், அலங்காரத்திற்காக கிடையாது என்பதை மக்கள் புரிந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில கடைகள் இரவு நேரங்களில் முழுக்க முழுக்க விளக்குகளை எரியச் செய்கின்றன. எனவே, பருவநிலை மாற்ற ஆர்வலர்கள், தேவையின்றி எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதே சமயத்தில் Lyon நகரில் இருக்கும் கடைகள் எல்இடி விளக்குகளை உபயோகிப்பது, பகல் நேரங்களில் இருக்கும் வெளிச்சத்தை பொறுத்து, தாமாகவே அணைந்து விடும் விதத்தில் சென்சார் வைத்திருப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். எல்இடி விளக்குகள் குறைந்த அளவிலான மின்சாரத்தை தான் வெளியிடும்.
சென்சார்கள், இருக்கும் வெளிச்சத்தை பொறுத்து தாமாகவே விளக்குகளை அணைத்து விடும். இவ்வாறு அந்நகரில் வசிக்கும் மக்கள் மின்சாரத்தை சேமித்து பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.