Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற பேருந்து… மின்சார கம்பி உரசியதால் பறிபோன உயிர்… தஞ்சையில் பரபரப்பு…!!

தனியார் பேருந்து முன்னே செல்லும் லாரியை முந்தி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மின்கம்பத்தில் உரசியதால் பேருந்தில் இருந்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் தஞ்சையிலிருந்து திருவையாறுக்கு இன்று புறப்பட்டது. இந்நிலையில் பேருந்து வரகூர்-கண்டியூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்ற லாரியை முந்தி செல்வதற்காக முயற்சி செய்தது. அப்போது அருகில் இருந்த மின் கம்பியின் மீது பேருந்து உரசியதால், பேருந்தில் பயணித்த  5 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் பேருந்தில் பயணித்து இறந்த அந்த மூன்று பேர் யார் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 பேரில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |