Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டிட பணிக்காக சென்றவர்…. வழியில் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சிவக்குமார் என்ற கட்டிட தொழிலாளி வசித்துவருகிறார். இவர் கட்டிட பணிக்காக சிமெண்ட் கலவை இயந்திரத்தை பள்ளிப்பட்டு பகுதிக்கு கொண்டு சென்றபோது, போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஒரு சைக்கிளை எடுத்து அங்கு இருந்த ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |