உயர்மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் கிராமம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திநகர் சிங்காரம் தெருவில் மகேந்திரன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் பில்லர் அமைப்பதற்காக குணசேகரன் கம்பி கட்டியுள்ளார். அப்போது பில்லருக்கு கட்டியிருந்த கம்பி திடீரென சாய்ந்ததால் குணசேகரன் கம்பியை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் கட்டிட உரசிவிட்டது. இதனால் குணசேகரன் மீது மின்சாரம் பாய்ந்து அவர் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.