Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் அலட்சியம்…. விளையாடி கொண்டிருந்த சிறுவன் இறப்பு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கியதில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் வரதன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது மூத்த மகன் கவுதம் என்ற 8 வயது சிறுவன் அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளான். அப்போது பூங்காவில் இருந்த மின் விளக்கில் வெளியே தெரியும்படி தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது உரசி விட்டது. அதிலிருந்து சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டான்.

இதனை அடுத்து கவுதம் திரும்பி வராததால் அவரைத் தேடி நிஷா பூங்காவிற்கு சென்று உள்ளார். அப்போது மின்சார கம்பியை பிடித்தவாறு தன் மகன் கீழே விழுந்து கிடப்பதை கண்டு சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் பீர்க்கன்காரணை பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் சிறுவனின் உயிர் பறிபோனது என்று கூறி தாம்பரம்-முடிச்சூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து தாம்பரம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |