Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஐயோ இப்படியா நடக்கணும்…. ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலம்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் சுரேஷ் போச்சம்பள்ளி பகுதியில் பழுதான தெரு விளக்கை மின்கம்பத்தில் ஏறி சரி செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது தீடிரென சுரேஷ் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனால் தூக்கி எறியப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி காவல்துறையினர் சுரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |