மின்சார வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சம்பத் ராயன்பேட்டை காமராஜர் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழில் செய்து வந்துள்ளார். இவர் கொசஸ்தலை ஆற்று பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு சென்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கொண்டார். அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வெங்கடேசனின் மனைவி ஜமுனா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.