மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தம்பாடி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசக்தி என்ற மனைவியும், முகிலன் என்ற மகனும் இருக்கின்றார். இதனை அடுத்து செல்வராசு தனது வீட்டில் அருகே மாட்டு கொட்டை அமைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இடியுடன் கூடிய கனமழையின் காரணமாக மின்சார வயர் அறுந்து செல்வராசுவின் மாட்டு கொட்டகை மீது விழுந்துள்ளது. இதனால் மாடு கத்தியுள்ளது. இதனை தொடர்ந்து செல்வராசு வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மாட்டின் மீது மின்சாரம் தாக்கியது தெரியாமல் தட்டி கொடுத்துள்ளார்.
இதனால் மின்சாரம் தாக்கி செல்வராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன் பிறகு மாடும் பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராசுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.