மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற 15 ஆண்டுகால கனவு நிறைவேறியதால் மலை வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்லாங்குத்து பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அங்கு வசிக்கும் மக்களுக்கு 113 காங்கிரீட் வீடுகள் கட்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் மின்சார வசதியை ஏற்படுத்துவதற்காக மின்மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இதனை அடுத்து தங்களின் 15 ஆண்டுகால கனவு நிறைவேறியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி திறப்பு விழாவானது நடைபெற்ற போது, கொரோனா தொற்று அச்சம் காரணமாக மின்வாரிய உதவி பொறியாளர் முத்துக்குமார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும் போது, 63 கிலோ வாட் திறன் கொண்ட மின் மாற்றி கல்லாங்குத்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின் விளக்கு வசதி செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதோடு இங்கு வசிக்கும் மலை வாழ் மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கொண்டு அவரவர் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.