தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று 10,289 பேருக்கு பரிசோதனை செய்ததில் 646 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,342 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 4,31,739 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிப்பா என இன்று மட்டும் 9,677 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றை பரிசோதிக்க தமிழகத்தில் 68 மையங்கள் உள்ளன. 41 அரசு மையங்களும், 27 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன.
கொரோனா அறிகுறியுடன் தனிமை கண்காணிப்பில் 5,906 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 35 பேர், குஜராத்தில் இருந்த வந்த 6 பேருக்கும், தலங்கானாவில் இருந்து வந்த 3 பேருக்கும், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.