கருவேப்பிலையின் மருத்துவ குணம் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கருவேப்பிலை பெரும்பாலானோரும் உணவில் அதிகம் சேர்க்க கூடிய ஒன்றாகும். சமையலில் கறிவேப்பிலை இல்லாமல் இருக்கவே இருக்காது. ஆனால் கருவேப்பிலையை சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கசப்பு பொருளாக பார்த்து ஒதுக்கி விடுகின்றனர்.
ஆனால் கருவேப்பிலை இரத்த சோகையை குணப் படுத்துகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய் சிகிச்சைக்கு உகந்த சீரான ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது. கல்லீரலை பாதுகாப்பது கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகிறது. ஆகவே இனி கருவேப்பிலை ஒதுக்காமல் சாப்பிடுவதன் மூலம் மேற்கண்ட பலன்களை அடையலாம்.