ஆஸ்திரேலிய நாட்டில் வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியா நாட்டின் ஆப்டஸ் நிறுவனமானது, நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தில் தான் நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருக்கின்றன. இது, ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இணையத்தாக்குதல் என்று கருதப்படுகிறது.
இவ்வாறு தரவுகள் திருடப்பட்டது தொடர்பில் அந்நிறுவனம் தெரிவித்ததாவது, வாடிக்கையாளர்களுடைய பெயர், வீட்டின் முகவரி, கடவுச்சீட்டு, பிறந்த தேதி, ஓட்டுனர் உரிம எண்கள் போன்றவை திருடப்பட்டிருக்கின்றன. எனினும் பணத்தை செலுத்தக்கூடிய தகவல்களும் கடவுச் சொற்களும் திருடப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது.
இவ்வாறு தரவுகள் திருடப்பட்டதற்கு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் கெல்லி பேயர் ரோஸ்மரின், வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, நவீனமான முறையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எங்களது நிறுவனத்தில் அதிக பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தரவுகள் திருடப்பட்டதை தடுக்க முடியவில்லை. ஏமாற்றம் அடைந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.