நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைமை அஞ்சலகம் இயங்கி வருகிறது. அந்த தலைமை அஞ்சலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில் மாவட்ட தலைமை அஞ்சலகத்திலுள்ள ஜெனரேட்டர் பழுதடைந்து பல நாள்கள் ஆகியும் சரிசெய்யப்படாததன் காரணமாக மின்தடை ஏற்படும் நேரங்களில் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்யமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதனால் வாடிக்கையாளர்கள் கூடிய விரைவில் அஞ்சலகத்தின் ஜெனரேட்டரை சரிசெய்ய வேண்டும் என நிர்வாகத்தினரிடம் கோரிக்கைவைத்துள்ளனர்.