வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் சலுகைகளை பெற்று ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கிவாடிக்கையாளர்களே அதிரடி சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து வருகின்றன. முன்னதாக எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டை எளிதாக பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தற்போது எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் நேற்று யோனா சூப்பர் சேவிங் டேஸ் என்ற திட்டத்தை எஸ்பிஐ அறிவித்தது. இந்த திட்டம் ஏற்கனவே கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த திட்டத்தை மார்ச் 4 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். கடந்த மாதம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைந்தனர்.
தற்போது இந்த திட்டம் இரண்டாம் கட்டமாக மீண்டும் தொடங்கியுள்ளதால் இன்னும் ஏராளாமான வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள். இதில் பயணம், மருத்துவம், ஆடைகள், உணவு ஆர்டர், திரையரங்குகள், ஆன்லைன் ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஷாப்பிங் செய்து சலுகைகளை பெற்று கொள்ளலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கிக்கு சென்றோ அல்லது எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்றோ வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.