Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! மார்ச்-31 க்குள் இதை செய்யாவிட்டால்…. பணம் எடுக்க முடியாது – PNB மீண்டும் எச்சரிக்கை…!!

நிதி நிலைமை மற்றும் கடுமையான கடனில் சிக்கித் தவிக்கும் வங்கிகளை மத்திய அரசு தனியார் மயமாக்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சில வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியோடு இணைத்துள்ளது. இதனால் அந்த இரண்டு வங்கிகளுடைய வாடிக்கையாளர்கள் புதிய காசோலை புத்தகம் மற்றும் ஐஎஃப்எஸ்சி கோடு ஆகியவற்றின் மார்ச் 31-ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கி வாடிக்கையாளர்களும் IFSC code மற்றும் MICR கோட் ஆகியவற்றை மாற்றாவிட்டால் பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வங்கி சேவைகள் அமலுக்கு வர இருப்பதால் பழைய IFSC code -ஐ வாடிக்கையாளர்கள் மாற்றினால் மட்டுமே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அருகில் உள்ள வங்கி கிளையை அணுகி தெரிந்து கொள்ளலாம். அல்லது 18001802222, 18001032222என்ற நம்பருக்கு அழைத்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |