Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! மார்ச்-31 க்குள் இதை செய்யாவிட்டால்…. பணம் அனுப்ப முடியாது -அதிரடி அறிவிப்பு…!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய அனைத்து கிளைகளின் வாடிக்கையாளர்களுக்கும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பழைய IFSC code, MICR code ஆகியவற்றை மாற்றாவிட்டால் பணபரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமல் படுத்தப்படுவதால் பழைய ஐஎஃப்எஸ்சி கோட் மூலமாக வங்கிச் சேவைகளை பெற முடியாது. அதேபோல ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த இரு வங்கியின் வாடிக்கையாளர்களும் புதிய காசோலை புத்தகம், ஐஎப்எஸ்சி கோடு ஆகியவற்றை மாற்ற வேண்டும். வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் புதிய நடைமுறைக்கு மாற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக டோல் ஃப்ரீ நம்பர் 8001802222 அல்லது 18001032222 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

Categories

Tech |