Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மனைவிக்கு அரிவாள் வெட்டு….. கணவன் கழுத்தறுத்து தற்கொலை…. தேனி அருகே சோகம்..!!

தேனியில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூட்டிலங்கோடு  பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அம்மணி.  இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடைசி மகள் அம்பிகாவை  தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணனுக்கும் அவரது மனைவி அம்மணிக்கும்  இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம் .இந்நிலையில் நேற்றைய தினம் அம்பிகா காலையில் வேலைக்குச் செல்ல வீட்டில் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி அம்மணி இருவரும் தனியாக இருந்து வந்த நிலையில்,

திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றவே ஆத்திரமடைந்த கிருஷ்ணன் அரிவாளால் சரமாரியாக மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதையடுத்து காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வீட்டின் பின்புறம் சென்று அவரும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

பின் வீட்டிற்கு திரும்பி வந்து அம்பிகா  பார்வையிட்டபோது பெற்றோர்கள் இருவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார். பின் இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Categories

Tech |