மாமனார் தனது மகனுடன் இணைந்து மருமகனை மண்வெட்டியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் கிராமத்தில் செல்வராஜ், மற்றும் ராஜேந்திரன் என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த 9ஆம் தேதியன்று கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த செல்வராஜின் மருமகன் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து கோபத்தில் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் பிரபு இருவரும் மணிகண்டனை கண்டித்து அவதூறாக பேசியுள்ளனர். அப்போது கோபம் அடைந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் பிரபு ஆகிய இருவரும் இணைந்து மண்வெட்டியால் மணிகண்டனின் நெற்றியில் வெட்டி உள்ளனர். இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரன் மற்றும் பிரபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.