Categories
சினிமா தமிழ் சினிமா

CWC சுனிதாவை திருமணம் செய்யணும்…. வாழ்க்கை நன்றாக இருக்கும்… பிரபல தமிழ் நடிகர் ஆசை …!!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களை கடந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் முதல் சீசனில் வனிதாவும் இரண்டாவது சீசனில் கனியும் டைட்டிலை வென்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்ததன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சுனிதா.

இந்த நிலையில்’குக்வித் கோமாளி’ சுனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ‘சர்பட்டா’ பட நடிகர் சந்தோஷ் பிரதாப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுனிதாவுடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அவர் எனக்கு ஒரு நல்ல தோழி. இருப்பினும் அவரை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட நிலையில், சந்தோஷ் இப்படி கூறியுள்ளார்.

Categories

Tech |