“சியான் 60” படத்தில் விக்ரம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர் விக்ரமின் “சியான் 60″படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் விக்ரம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் துருவ் விக்ரம்க்கு வில்லனாக விக்ரம் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும் இப்படத்தில் பிரபல நடிகரான விக்ரமும் அவரது மகனான துருவ் விக்ரமும் இணைந்து நடித்து வருவதால் ரசிகர்களிடம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கான அடுத்த அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.