Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“ஐரோப்பாவிலிருந்து பார்சல் வந்திருக்கு” பேஸ்புக்கில் ஏற்பட்ட பழக்கம்…. பாதிக்கப்பட்டவரின் பரபரப்பு புகார்…!!

பேஸ்புக் நட்பால் வாலிபர் 83 ஆயிரம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை – பெரம்பலூர் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் குழாயின் வழியே கேஸ் கொண்டு சேர்ப்பதற்காக குழாய்கள் பதிக்கும் வேலை நடந்து வருகிறது. அதில் குஜராத் மாநிலத்தவரான பருல்சர்மா பொறியியல் பிரிவின் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் ஜோசப் ஸ்மித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்மாவிற்கு ஜோசப் ஸ்மித் அன்பளிப்பு தரப்போவதாக கூறியுள்ளார்.

அதன்பின் சர்மாவின் பெயருக்கு ஐரோப்பாவில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும் அதில் ஆடை, ஆபரணம், யூரோ டாலர்கள் இருப்பதாகவும் மர்மநபர் செல்போனில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதுதில்லியில் உள்ள விமான நிலையத்தில் பார்சல் இருப்பதாகவும் அதனைப் பெற  சுங்கவரி உள்ளிட்ட சில வரிகளோடு சேர்த்து 83000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அந்த மர்மநபர் சர்மாவிடம் கூறியுள்ளார். இதை நம்பிய சர்மா கூகுள் பே மற்றும் போன் பே வழியாக  மர்மநபரின் வங்கி கணக்கிற்கு  83000 ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் சர்மாவிற்கு எந்த பார்சலும் வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சர்மா உரிய ஆதாரங்களுடன் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மோசடி செய்த நபர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு அந்த மர்மநபரின் வங்கி கணக்கினை அதிகாரிகள் முடக்கிவிட்டனர். இதனையடுத்து அந்த மர்மநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டுத்தருவதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

Categories

Tech |