பொருட்களின் விலையை குறைக்க கூறி 100-க்கும் அதிகமான கட்சியாளர்கள் சைக்கிள் ஊர்வலம் நடத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல்களின் விலை நாளுக்கு நாள் அதிகமாவதால் கட்டுமான பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை ஏற்றத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமையல் கேஸ் மற்றும் பெட்ரோல்களின் விலைகளின் உயர்வு காரணமாக வைத்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து இம்மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக தாலுக்கா அலுவலகம் எதிரில் மாவட்ட தலைவர் அளவூர்நாகராஜன் தலைமையில் 100-க்கும் அதிகமான காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சைக்கிள் ஊர்வலம் நடத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர்.