பிரான்ஸ் நாட்டில் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 1970 கோடி ரூபாய் செலவு செய்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசு எரிபொருள் சேமிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு மிதிவண்டிகளின் பயன்பாட்டை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எனவே, போக்குவரத்திற்கு மிதிவண்டியை பயன்படுத்தும் மக்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, கிராமங்களில் மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க தனியாக வழித்தடம் அமைத்தல், மிதிவண்டியை வாங்குவதற்கு நிதி உதவி போன்ற திட்டங்களுக்கு அடுத்த வருடத்தில் சுமார் 1970 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.