Categories
சினிமா தமிழ் சினிமா

சைக்கிளிங் செய்தபோது விபத்து… முகத்தில் காயத்துடன் மாளவிகா வெளியிட்ட புகைப்படம்…!!!

சைக்கிளிங் செய்தபோது விபத்து ஏற்பட்டதாக நடிகை மாளவிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு ,சந்திரமுகி, நான் அவன் இல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ‌. இதன்பின் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . அவ்வப்போது மாளவிகா சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் .

இந்நிலையில் முகத்தில் காயத்துடன் நடிகை மாளவிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் சைக்கிளிங் செய்யும்போது விபத்து ஏற்பட்டதாகவும்  தனது விரல்கள் உடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ‘நான் ஒரு  வீராங்கனை விரைவில் மீண்டு வருவேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்

Categories

Tech |