Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதாக நினைத்து மகிழ்ச்சி.. உண்மை தெரிந்ததும் கதறிய பெண்..!!

ஒலிம்பிக்கில் மகளிருக்கான சைக்கிள் போட்டியில், ஒரு இளம்பெண் தான் தங்கம் வென்றதாக கருதி மகிழ்ச்சியில் மிதந்த போது ஏற்கனவே ஒருவர் வென்றதை அறிந்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

நெதர்லாந்தை சேர்ந்த Annemiek van Vleuten என்பவர் மிதிவண்டி போட்டியில் இலக்கை அடைந்துவிட்டார். எனவே, தான் தங்கம் வெல்லப்போவதாக நினைத்து ஆரவாரமாக கூச்சலிட்டு மகிழ்ந்தார். எனினும் அவருக்கும் ஒரு நிமிடம் 15 நொடிகளுக்கு முன்பே, ஆஸ்திரிய நாட்டின் Anna Kiesenhofer என்பவர் தங்கம் வென்று விட்டார் என்று அவருக்கு தெரியவில்லை.

அதாவது மிதிவண்டி போட்டி நடக்கும் சமயத்தில் வீரர்-வீராங்கனைகள் எந்ததெந்த இடத்தை பிடிக்கிறார்கள் என்பதை உடனடியாக அறிவிக்கக்கூடிய ரேடியோ தகவல் தொடர்பு வசதிகள் கிடையாது. இதனால் தான் அந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

எனினும் Annemiek, தான் வெற்றியடைந்ததாக தவறாக நினைத்துக் கொண்டு கொண்டாடியது, மிகப்பெரிய தவறு என்று அந்நாட்டின் ஊடகங்கள் விமர்சிக்க தொடங்கின. எனவே அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். அவர் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |