Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் வாங்குறீங்களா… முக்கிய அறிவிப்பு… விடாதீங்க..!!

சிலிண்டர் வினியோகிக்கும் நபர்களுக்கு வழங்கும் கட்டணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம்.

வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கேஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள் ரசீதில் உள்ள தொகையைவிட, வீடுகளுக்கு ஏற்ப 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாகவும், இதுகுறித்து புகார் தெரிவித்தும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிலிண்டர் வினியோகமாக கட்டணம் வசூலிக்கப்படும் ரூ.19.50 நீங்கள் திரும்பப் பெறலாம். அதன்படி உங்களுக்கு தொடர்புள்ள எந்தவொரு ஏஜென்சியின் குடோனில் இருந்து உங்களுக்கு கேஸ் சிலிண்டரை நீங்களே கொண்டு வந்தால் இந்த தொகையை பெறலாம். மேலும் எந்த ஒரு ஏஜென்சி ஆபரேட்டர் இந்த தொகையை உங்களுக்கு வழங்க மறுக்கிறார்கள் என்றால்  18002333555 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.

Categories

Tech |