சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்தமாதத்துக்கான சிலிண்டர் விலை கடந்த 1-ந்தேதி மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே ஒரு கியாஸ் சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்திருந்தது. இந்நிலையில் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கூடி குறைவது மற்றும் குறைந்து கூடுவது அன்றாட தங்க விலை. கூடிக்கொண்டே வருவது அத்தியாவசியமான கியாஸ் விலை. விலை ஏற்றத்தில் சாதனை செய்ய அரசுக்கு திட்டம் இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.