Categories
மாநில செய்திகள்

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் கார் மோதி சிலிண்டர் லாரி தீப்பிடித்து விபத்து!

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர் லாரியில் மோதியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்தது.

கார் மோதிய வேகத்தில் சிலிண்டர் லாரி எரிவதால் நெடுஞ்சாலை புகைமண்டலாக காணப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் கார் ஓட்டுனரை பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தியுள்ளனர். கார் லாரியின் அடியில் சிக்கி தீப்பற்றி எரித்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த இடுங்காட்டுத்துறை தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். சிலிண்டர் வாகனத்தில் முழுவதும் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் இருந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சென்னை – பெங்களூரு இருவழியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |