ஜார்ஜியாவில் கட்டிடம் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜியாவின் சுற்றுலா நகரமான படுமி என்ற பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தக் கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த கட்டிடத்தின் இடிபடுகளுக்கு நடுவே சிக்கி இருந்த ஆறு வயது குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 15 பேரை தேடும் பணியில் மீட்புப் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.