டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம்.
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல். கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேர்தல் நடத்துகின்றோம். 5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். பீகார் தேர்தலில் பல பாடங்களை தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது. மொத்தம் 3 பார்வையாளர்கள்.
தேவேந்திர குமார் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கண்காணிப்பார், செலவின பார்வையாளர்கள் பாலகிருஷ்ணா, மது மாதன் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அது பற்றிய விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படுவர். வாக்குப் பதிவு மையங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.