செம்பருத்தி சீரியல் டிஆர்பி யில் டாப் 5 இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது.
வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
இந்த சீரியலில் வரும் பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஷபானா மற்றும் கார்த்திக்கின் ரொமான்ஸ் காட்சிகள் பலரையும் ஈர்ந்துள்ளது. ஆனால் நடிகர் கார்த்திக் கடந்த மாதம் இச்சீரியலை விட்டு விலகினார்.
அதன் பின் அக்னி என்பவர் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் செம்பருத்தி சீரியலை விட்டு விலகியதால் இச்சீரியலை காணும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் செம்பருத்தி சீரியல் டிஆர்பி யில் டாப் 5 இடங்களை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.