திமுக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் ஆன்லைன் மூலமாக முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து மண்டல வாரியாக, தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினார். தற்போது தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடத்த்துகின்றார்.
இந்த நிலையில் 100 நாள் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தொடங்க இருக்கின்றார். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் துவங்கும் இந்த 100 நாள் பிரச்சாரம் தேர்தல் பரப்புரையில் முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கடந்த தேர்தலில் தி மு க தலைவர் முக. ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தை முன்னெடுத்து பரப்புரையை செய்தது போல உதயநிதி ஸ்டாலின் இதனை மேற்கொள்கின்றார்.