தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவன புடி’ , ‘ரத்த சரித்தரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் சுதீப். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடிப்பில் வெளியான ‘தபாங் 3’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இந்தியத் திரைத்துறையில் வழங்கப்படும் முக்கிய விருதான தாதா சாஹேப் பால்கே இன்டர்நேஷனல் விருதை பெற இருக்கிறார். தபாங் 3 படத்தில் நடித்தற்காக சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்னும் பிரிவில் இந்த விருதை அவர் பெற இருக்கிறார்.
இந்த விருதானது பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், மகராஷ்டிரா ஆளுநர் வழங்க உள்ளார். இந்த அறிவிப்பையடுத்து கன்னட திரையுலகினர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
Thank u so much 🤗 https://t.co/nt0pynpFtp
— Kichcha Sudeepa (@KicchaSudeep) January 22, 2020