யூடியூப் சேனல் பேசிய மதனின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமை நேரலையில் பப்ஜி மதன் விளையாடி வந்துள்ளார். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த சேனலில் நிர்வாகி என்பதால் நேற்று கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கிருத்திகா உடன் அவரின் 8 மாத குழந்தையும் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள மதனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதனுக்கு முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரணை செய்தார். இந்த வழக்கில் மதனின் யூடியூப் சேனலில் பின்தொடர்வோர் 30% பள்ளி மாணவர்கள் என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் தொழில் போட்டியாளர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் தரவில்லை.
ஆனால் ஆபாசமாக பேசி வரும் மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று காவல்துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. வழக்கின் இறுதியில் பேசிய நீதிபதி மதன் ஆடியோவின் ஆரம்பமே கேட்க முடியாத வகையில் இருப்பதாகவும், குழந்தைகளை கெடுக்கும் வகையில், பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மதனின் பேச்சை காது கொடுத்து கேட்டு விட்டு, பிறகு முன்ஜாமின் வாங்க வருமாறு ஜாமீன் கோரிய வழக்கறிஞர்களை அறிவுறுத்தியுள்ளார்.