தந்தை மகனை கண்டித்த காரணத்தினால் தாய், தந்தை இருவரையும் 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனுமந்தையா என்ற நபர் அவரது மனைவி ஹொன்னம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பீனியாவில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து அங்கேயே வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் தனது பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஊர் சுற்றுவது, உல்லாசமாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது தந்தை கண்டித்து திட்டியுள்ளார். ஆனாலும் அவரது பேச்சை கேட்காமல் அந்த சிறுவன் மீண்டும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அடிக்கடி தந்தை தன்னை திட்டிக்கொண்டு வருவதால் அவரை எப்படியாவது கொலை செய்யவேண்டும் என்று திட்டமிட்டு அவர் மீது கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
அவரது தாய் தடுக்க முயற்சித்த போது தாயென்றும் பாராமல் அவர் மீது கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளான். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போது தந்தை மட்டுமே கொலை செய்ய திட்டமிட்டதாகவும், தாய் தடுக்க வந்ததால் அவரையும் கொலை செய்ததாகவும் அந்த சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.