காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்றதன் நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸார் குளச்சலில் இருந்து இரணியல் வரை யாத்திரை பயணம் செல்ல முயன்றனர்.
இந்த யாத்திரை செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதால் இளைஞர் காங்கிரஸார் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மறியல் செய்த காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.