இந்தியாவிலே ஒரு சர்க்கார் இருக்கிறதா ? இது நம்முடைய சர்க்காரா ? தமிழர்களின் இந்திய பிரஜை இல்லையா ? இந்திய குடிமக்கள் இல்லையா ? அவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் யாரு ? தாடி மோடி . அதெல்லாம் ஒன்னும் நடக்காது. பழைய இலக்கியங்களை சொல்லி, இந்த பழந்தமிழ்நாட்டிலே போராடிய வேலு நாச்சியார் போன்ற வீரர்களை சொல்லி, ஏமாற்றி விடலாம் என்று நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதெல்லாம் நடக்காது.
பிஜேபி அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்வது கொண்டிருக்கிறது. ஐநா மன்றத்தில் முன்பு செய்த அதே துரோகத்தை தான் இப்போதும் செய்கின்றது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தான் ஆளுநர் ஆர்.என் ரவி செயல்படுகிறார். அவர் பிஜேபினுடைய கைப்பாவையாக…. ஊது குழலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் சட்டம் அரங்கேறிய இந்த நாள் அன்று அவர் பேசுவதெல்லாம் பொய். சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். அவர் தமிழ்நாட்டுக்கு விரோதமான செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டுகின்றேன்.