அப்பாவின் தவறான உறவால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று மானசா தனது அம்மாவின் சகோதரர் ( மாமா ) புட்டசாமி எண்ணுக்கு வாட்ஸ அப் மெசேஜ் அனுப்பியுள்ளார்.அதில் , என் வாழ்க்கையே என்னுடைய அப்பா சீரழித்து விட்டார் எங்கள் சாவுக்கு அவர்கள் தான் காரணம் என்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த புட்டசாமி நேரடியாக சகோதரியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்ட பட்டத்தை கண்டு அதிர்ச்சியுற்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது அதிர்ந்து போனார்.
அதில் தனது சகோதரி மற்றும் மானசா , பூமிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதையடுத்து போலீஸ்_க்கு தகவல் கொடுக்கப்பட்டு , உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் சித்தையா , வேறு பெண்களுடன் வைத்துள்ள தொடர்பை நிறுத்த சொல்லியும் , கேட்காததால் மனமுடைந்து , வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தலைமறைவான சித்தையா_வை போலீசார் தேடி வருகின்றனர்.