திமுக ஆட்சியில் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கிடைப்பது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து 3 ட்விட் பதிவுகளை போட்டுள்ளார். அதில், அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தபோதும்-இறந்தபோதும் விஜயபாஸ்கரே சுகாதார அமைச்சர். அன்று முதல்வராக இருந்தவர் இன்று துணைமுதல்வர். அன்று அமைச்சராக இருந்தவர் இன்று முதல்வர். ஜெ.மரணத்தின் மர்மம் இவர்களை தாண்டியா மற்றவர்களுக்கு தெரிந்திருக்கப்போகிறது என்பதே மக்களின் கேள்வி.
ஆனால், ஜெ மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9வது முறையாக காலநீட்டிப்பு கேட்கிறது. சிறு பெட்டிகேஸில்கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார். அப்படி ஜெ மரணத்துக்கு நீதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன?
ஆணையம் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை. இவர்களை அடையாளம்காட்டிய ஜெ. மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காதபோது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப்போகிறது? அடுத்த 6 மாதத்தில் தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமையும் ஆட்சியில் ஜெ. மரணத்திற்கு நிச்சயம் நீதிகிடைக்கும். இது உறுதி
ஆணையம் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை. இவர்களை அடையாளம்காட்டிய ஜெ. மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காதபோது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப்போகிறது? அடுத்த 6 மாதத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் அமையும் ஆட்சியில் ஜெ. மரணத்திற்கு நிச்சயம் நீதிகிடைக்கும். இது உறுதி 3/3
— Udhay (@Udhaystalin) October 18, 2020
ஆனால், ஜெ மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9வது முறையாக காலநீட்டிப்பு கேட்கிறது. சிறு பெட்டிகேஸில்கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார். அப்படி ஜெ மரணத்துக்கு நீதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன?2/3
— Udhay (@Udhaystalin) October 18, 2020
அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தபோதும்-இறந்தபோதும் விஜயபாஸ்கரே சுகாதார அமைச்சர். அன்று முதல்வராக இருந்தவர் இன்று துணைமுதல்வர். அன்று அமைச்சராக இருந்தவர் இன்று முதல்வர். ஜெ.மரணத்தின் மர்மம் இவர்களை தாண்டியா மற்றவர்களுக்கு தெரிந்திருக்கப்போகிறது என்பதே மக்களின் கேள்வி.1/3
— Udhay (@Udhaystalin) October 18, 2020