தோப்புக்கரணம் ஒரு உன்னதமான பயிற்சி. இதை தினமும் காலையில் செய்வதன் மூலம் நம் உடல் மற்றும் உள்ளம் எவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கிறது என்பதை குறித்து இதில் தெரிந்துகொள்வோம்.
சுத்தமான சமமான இடத்தில் இரு கால்களையும் வைத்து நின்று கொள்ளவும். வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழும் வேண்டும். இவ்வாறு செய்யும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். எழும் போது மூச்சை மெதுவாக வெளியிட வேண்டும். இந்த பயிற்சியை முதல் 5 முறை பின்னர் பழகப் பழக கொஞ்சம் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.
இதன் மூலம் உள்ளிருக்கும் மூச்சுக் காற்றிலுள்ள பிராணவாயு 70 சதவீதம் மூளைக்கு சென்று உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றது . உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கும். நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அடையும். குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்து, கல்வி, கேள்வி, அறிவு செல்வம் அதிகரிக்கும்.