செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு பத்துக்கும் கீழ் உள்ளது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை இரண்டு நாளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் மருந்து கையிருப்பு நிலவரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு பத்துக்கும் கீழே உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள்எண்ணிக்கை 51 ஆக உள்ளது என தெரிவித்தார்.
Categories