ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 74692 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருக்கும் மாஸ்கோ நகரில் தற்போது வரை இல்லாத அளவிற்கு 19,856 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் 657 நபர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு மொத்தமாக 3, 28,105 பேர் கொரோனாவால் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த வாரம் தினசரி பாதிப்பு 50,000-த்திற்குள் இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்தை தாண்டியிருப்பதாக அந்நாட்டின் சுகாதார மையம் கூறியிருக்கிறது.